பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்கா!
புதன், 6 பிப்ரவரி 2008 (13:26 IST)
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் என்னதான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், அவை தவறானவர்களின் கைகளில் சிக்குவதற்கான ஆபத்து அப்படியேதான் உள்ளது என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் மைக் மெக்கனெல் கூறுகையில், "உள்நாட்டுப் பாதுகாப்புடன் கூடிய அணு ஆயுதக் கொள்கைகளை பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகள் பாதிக்கவில்லை என்றாலும், அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது" என்றார்.