இ‌ந்‌தியாவுடனான ந‌ல்லறவு ‌‌‌வலு‌ப்பெறு‌ம்: மலே‌சியா ந‌ம்‌பி‌க்கை!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:12 IST)
இ‌ந்‌தியாவுட‌‌‌‌ன் ‌நீடி‌க்கும் ந‌ல்லுறவுக‌ள் மேலு‌ம் வலு‌ப்பெ‌று‌ம் எ‌ன்று மலே‌சியா ந‌ம்‌‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திய‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் எ.கே.அ‌ந்தோ‌‌ணி இ‌ன்று காலை மலே‌சிய‌ப் ‌பிரதம‌ர் அ‌ப்து‌ல்லா பதாவியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர். 40 ‌நி‌மிட‌‌ங்க‌ள் ‌நீடி‌த்த இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது, அர‌சிய‌ல் மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்த ப‌ல்வேறு ‌விடயங்க‌ள் கு‌றி‌த்து இருவரு‌ம் ‌விவா‌தி‌த்ததாக‌த் தெ‌ரி‌‌கிறது.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த இருவரு‌‌ம், இ‌ந்‌தியா- மலே‌சியா இடை‌யிலான பாதுகா‌ப்பு ஒ‌த்துழை‌ப்பு, ராணுவ‌த் தளவாட வ‌ர்‌த்தக‌ம் ஆ‌கியவை தொட‌ர்‌ந்து வள‌‌‌ர்‌ச்‌சி பெறு‌ம் எ‌ன்று ந‌ம்‌பி‌க்கை தெர‌ி‌வி‌த்தன‌ர்.

அ‌ப்போது அ‌ப்து‌ல்லா, இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் மலே‌சியா‌வி‌ற்கு‌ம் பாதுகா‌ப்பு‌த் துறை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அ‌ம்ச‌ங்க‌ளி‌ல் ‌‌‌நீடி‌த்துவரு‌ம் ந‌ல்லுறவுக‌ள் ‌திரு‌ப்‌திய‌ளி‌ப்பதாகவு‌ம், இவை மேலு‌ம் வலு‌ப்பெறு‌ம் எ‌ன்று ந‌ம்புவதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்