பாகிஸ்தானுக்கு 78.5 கோடி டாலர் உதவி : அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!
புதன், 19 டிசம்பர் 2007 (17:35 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட 78.5 கோடி டாலர் உதவியை மீண்டும் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ராணுவ உதவியாக 30 கோடி டாலர், பொருளாதார வளர்ச்சிக்கான ஆதரவு உதவியாக 35 கோடி டாலர், மற்ற இனங்களுக்கு 3.5 கோடி டாலர் என்று இந்த நிதியுதவி பிரித்து வழங்கப்படும்.
இதில், மேம்பாட்டு உதவியாக 5.9 கோடி டாலர், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல உதவியாக 3.9 கோடி டாலர், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3.2 கோடி டாலர், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு 0.2 கோடி டாலர் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2003 ஆண்டு ஆண்டு பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைச் சந்தித்தபோது, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 350 கோடி டாலர் தொகையை பயங்கரவாத எதிர்ப்புப் போர் உதவியாக வழங்குவது என்று கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இந்த நிதி வழங்கப்படுகிறது.