''மேற்கத்திய நாடுகள் சித்தரிப்பதைப் போல நான் ஒரு சர்வாதிகாரி அல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நான் விரும்புகிறேன்' என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், 'பதவி விலகுவது பற்றி ஆலோசித்துள்ளேன். மேற்கத்திய அரசுகள், ஊடகங்கள் சித்தரிப்பதைப் போல நான் சர்வாதிகாரி அல்ல. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதையே விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
'அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தவும், மேம்படுத்தவும் தேசியக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதன் உத்தரவுப்படிதான் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றார் முஷாரஃப்.