பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வாசிர்ஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். இந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த ராணுவத்தினரில் 245க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்து கடத்திச்சென்று விட்டனர். 2 மாதங்களாக அவர்களது கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை விடுவிக்க தீவிரவாதிகளுடன் பழங்குடி இனத்தலைவர்கள் மூலம் பாகிஸ்தான் அரசு பேச்சு நடத்தியது.
இதை தொடர்ந்து 30 ராணுவத்தினரை மட்டும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர் மீதி உள்ள ராணுவத்தினர் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர்.