2007 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் பெர்ட், ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் குருன்பெர்க் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர், ஐ போட், மற்றம் மின்னனு சாதனங்களில் பயன்படுத்தும் ஹார்ட் டிஸ்குகள் சிறிய அளவில் வடிவமைத்ததற்காக இந்த நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவர்கள் ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்படும் மிக நுன்னிய தகவல்களையும் இனம் காணும் கருவியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது.
இவர்கள் இதனை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் எம்.பி.3, ஐ போட் போன்றவைகளை உருவாக்கி இருக்கவே முடியாது என்று நோபல் பரிசு வழங்கும் ராயல் சுவிடிஸ் அகாடமியின் உறுப்பினர் போர்ஜி ஜனான்சன் கூறினார்.
ஆல்பர்ட் பெர்ட் (வயது 69) தால்ஸ்சில் உள்ள சி.என்.ஆர்.எஸ். நிறவனத்தின் இயற்பியல் ஆய்வு பிரிவைச் சேர்ந்தவர்.
பிட்டர் குருன்பெர்க் (வயது 68) மேற்கு ஜெர்மனியிலுள்ள இன்ஸ்டியூட் ஆஃப் சாலிட் ஸ்டேட் ரிசர்ச் நிறவனத்தில் வி்ஞ்ஞான இயக்குநராக உள்ளார்.
நோபல் பரிசுத் தொகையான 10 மில்லியன் சுவிடிஸ் குனார் (1.5 மில்லியன் டாலர்) இருவரும் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.