ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு வந்தடைந்தார்.
இலங்கையில் 5 நாள் பயணம் மேற்கொள்ளும் லூயிஸ் ஆர்பர், சிறிலங்கா அரசு தரப்பு மற்றும் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசுவார் என்று ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வெய்ஸ் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசினால் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதால் இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் லூயிஸ் ஆர்பரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.