பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபான் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 45 பேரும், தாலிபான் தீவிரவாதிகள் 130 பேரும் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹித் அர்ஷாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மிராலி எனும் நகரின் தென் பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர். பின்னர் ராணுவத்தினர் விமானங்கள் மூலமாகவும், தரைவழியாகவும் தீவிரவாதிகளைத் தாக்கினர்.