ஐக்கிய நாடுகள் அவையின் எந்த ஒரு அதிகாரியையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக நேற்று கூறியதாவது :
ஐக்கிய நாடுகள் அவையின் சித்திரவதைகள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி நோவாக் அல்லது மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் என யாரும் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ள முடியாது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இத்தகைய சந்திப்புக்களை விடுதலைப் புலிகள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துவதனாலும் அவர்களை நாம் அனுமதிக்கவில்லை.
வருகை தரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இந்த நாட்டின் இதரப் பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்று என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.