கிழக்கு ஜெர்மனியில் உள்ள சக்சோனி மாகாணத்தில் இந்தியர்கள் மீது அடையாளம் தெரியாத ஜெர்மனிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் இந்திய தூதர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியர்களைக் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரிடம் ஜெர்மன் அமைச்சர் ஹெர்மன் விங்க்லெர் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜெர்மன் அமைச்சர் ஹெர்மன் விங்க்லெர், இந்திய தூதர் மீரா சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவம் கண்டனத்துக்குரியது என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஜெர்மன் அமைச்சர் அப்போது கூறினார்.
இதற்கிடையே, இந்தியர்கள் தாக்கப்பட்ட சக்சோனி மாகாணத்துக்கு சென்ற தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். இந்தியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து ஜெர்மனியின் இடதுசாரிக் கட்சிகள் பேரணி நடத்தியுள்ளன.