தீவிரவாதிகள் வெளியேராவிட்டால் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மசூதியை சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் உள்ள தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திறுகும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் சரண்டையாவிட்டால் சுட்டுக் கொல்வோம் என அந்நாட்டு அதிபர் முஷாரப் எச்சரிக்கை விடுத்தார்.
எனினும் தீவிரவாதிகள் மசூதியை விட்டு வெளியேறவில்லை. நேற்று 6 வது நாளாக ராணுவத்திற்க்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இந்நிலையில் அதிபர் முஷாரப் உயர் ராணுவ அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தீவிரவாதிகள் மசூதியை விட்டு வெளியேறவில்லை என்றால் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு அப்போது அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மசூதியை சுற்றிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் மசூதிக்குள் புகுந்து ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.