புவி வெப்பமடைதல்: கடல் நீர் மட்டம் 7 அடி உயர்கிறது!
செவ்வாய், 16 ஜூலை 2013 (12:59 IST)
இனி வரும் காலங்களில் புவியின் வெப்ப நிலை ஒவ்வொரு செல்சியஸ் டிகிரி அதிகரிக்கும்போதும் கடல் நீர் மட்டம் 2.3 மீட்டர்கள் அதிகரிக்கும் என்று புதிய சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
FILE
கடந்த கால வெப்ப நிலை உயர்வு அதனையடுத்த கடல் நீர்மட்ட உயர்வு தற்போதைய வெப்ப நிலை உயர்வு இதனையடுத்த கடல் நீர் மட்ட உயர்வு என்ற அடிப்படையில் இந்த ஒப்பு நோக்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆய்வில் எந்த அளவுக்கு புவி வெப்பமடையும் என்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்தவில்லை. மேலும் எப்படி கடல் நீர்மட்டம் உயர்கிறது என்பதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இவையெல்லாம் காலம் போகப் போகத்தான் அறுதியிடமுடியும் என்று ஆரிஜன் பல்கலை வானிலை ஆய்வாளர் பீட்டர் கிளார்க் தெரிவித்துள்ளார்.
கடல் நீர்மட்டம் அதிகரிப்பில் 4 காரணிகள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது.
பனிச்சிகரங்கள் உருகுதல், கிரீன்லாந்து பனிப்படலம் உருகுதல், அண்டார்ட்டிக் பனி உருகுதல், மேலும் கடல் நீர் உஷ்ணமடையும்போது கடல் தானாகவே விரிவடைவது. ஆகிய இந்த 4 காரணங்கள்தான் கூறப்பட்டுள்ளது.