இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே இருக்கும்: ஐ.நா!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (20:00 IST)
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உலகளவில் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'லா நினா', 'எல் நினோ' ஆகிய இரண்டு முக்கிய இயற்கை நீரோட்டங்களின் தாக்கம் உலகம் முழுவதிலும் மிக கடுமையானதாக உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

'எல் நினோ' சூடான நிலைக்கு பூமியை கொண்டு வரும் நிலையில், 'லா நினா' குளிர்ச்சி அடையச் செய்கிறது. இந்த ஆண்டில் பசிபிக் கடலில் சக்திவாய்ந்த 'லா நினா' நிலைகொண்டுள்ளது. இதனால் ஆஸ்ட்ரேலியாவில் அதிக மழைப்பொழிவும், சீனாவின் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருந்து வருகிறது.

உலகின் வானிலை கழக செயலர் மைக்கேல் ஜார்ராட், கூறுகையில், “வடக்கு பசிபிக் கடலில் வெப்ப நிலை உயர்ந்ததால், வளிமண்டலம் அதிக சக்தி பெற்றுள்ளது. இதனால் மழையும், இடியும் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கம் கோடைகாலத்திலும் தொடரும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்