கார் உற்பத்தி வரி அதிகரிப்பு!

சனி, 14 ஜூன் 2008 (12:40 IST)
அதிக இன்ஜின் திறன் உள்ள கார்களின் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது இன்ஜின் திறனை கணக்கெடுக்காமல், சிறிய கார் முதல் பெரிய கார்கள் வரை எல்லாவித கார்களுக்கும் ஒரே மாதிரியாக உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

இதை தற்போது என்ஜின் திறனை பொருத்து மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

தற்போது விதிக்கப்படும் 24 விழுக்காடு அட் வாலரோம் (மத்திய விற்பனை வரி) வரி இல்லாமல், 1500 முதல் 1999 சி.சி என்ஜின் திறன் உள்ள கார்களுக்கு ரூ.15,000 உற்பத்தி வரியாக செலுத்த வேண்டும். என்ஜின் திறன் 2000 சி.சி க்கும் அதிகமாக உள்ள கார்களுக்கு ரூ.20,000 வரி செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்