தொழி‌ல் துறை உற்பத்தி 7 விழுக்காடாக உயர்வு!

வியாழன், 12 ஜூன் 2008 (14:13 IST)
டெல்லி : இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 7 விழுக்காடாக உள்ளது. இது மார்ச் மாதத்தைவிட 4 விழுக்காடு அதிகம். மார்ச் மாதத்தில் தொழில் துறை 3 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஏப்ரலில் தொழற்துறை உற்பத்தி 4.3 விழுக்காடு குறைவு. (2007-ஏப்ரல் 11.3%).

இயந்திரங்கள் மற்றவகை உற்பத்தி பொருட்களின் பிரிவு 7.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 2.9 விழுக்காடாக இருந்தது (2007-ஏப்ரல் 12.4%).

சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வருடம் மார்ச் வரையிலான 12 மாத காலத்தில் தொழில் துறை உற்பத்தி 8.1 விழுக்காடா உள்ளது (2007ஏப்ரல்-2008 மார்ச் 11.6%).

ராய்ட்டர் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஏப்ரல் மாதத்தில் தொழிற் துறை உற்பத்தி 5.7 விழுக்காடாக இருக்கும் என அறிவித்து இருந்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி தொழில் துறை உற்பத்தி 7 விழுக்காடாக உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில் துறை உற்பத்தி அளவு முக்கியமானதாக கணக்கிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்