சென்னையில் மெஷின் டூல் வர்த்தக கண்காட்சி!

செவ்வாய், 10 ஜூன் 2008 (14:29 IST)
சென்னையில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் மெஷின் டூல்களின் ஐந்து நாள் வர்த்தக தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் வர்த்தக தொழில் கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 19ஆம் தேதி 23ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் ஜப்பான், கொரியா, தைவான், ஜெர்மனி உட்பட 40 நாடுகளைச் நாடுகளைச் சேர்ந்த நிறுனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் மொத்தம் 420 நிறுவனங்கள் இடம் பெற உள்ளன. அவை உற்பத்தி செய்யும், விற்பனை செய்யும் பொருட்களை கண்காட்சிக்கு வைக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மெஷின் டூல்ஸ் நிறுவனங்களான பாரத் பெரிட்ஜ் வெர்னர், ஏ.சி.இ, பால்டிபாய், மைக்ரோமெடிக்ஸ், அந்நிய நாடுகளைச் சேர்ந்த ஹர்கோ, கேட்டர்பில்லர், மிட்டசுபா சிகால், கிரீவ்ஸ் காட்டன் உட்பட பல நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதில் சி.என்.சி. லேத், மில்லிங், பென்டிங் இயந்திரங்கள் உட்பட பல வகையான இயந்திரங்களும், ரோபட் இயக்கத்தில் உள்ள நவீன இயந்திரங்களும் இடம் பெற உள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சியின் இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த வருடம் மின்சார சாதனங்கள், மின்னணு சாதனங்கள், கனிணி போன்ற பொருட்களின் அரங்குகள் அமைக்கப்படாது. இத்தகைய பொருட்களும் முந்தைய கண்காட்சிகளில் அனுமதிக்கப்பட்டது.

இந்த கண்காட்சியின் போது பையர்-செல்லர் மீட் எனப்படும் பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்க விரும்புபவர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்களும் நடத்தப்படும். இந்த ஐந்து நாள் வர்த்தக தொழில் கண்காட்சியின் போது, சுமார் ரூ.21 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்காட்சியின் போது ரூ.15 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்