வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.62/ 41.64 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை3 1 டாலர் ரூ.41.58/ 41.59.
பிறகு வர்த்தகம் தொடங்கிய போது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தது. 1 டாலர் ரூ.41.63/ 41,64 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.
அயல் நாட்டு சந்தைகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஆசிய நாட்டு சந்தைகளில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 125 டாலராக அதிகரித்தது. நியுயார்க் சந்தையில் வெள்ளிக் கிழமையன்று பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 126.25 டாலராக அதிகரித்தது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை, நைஜிரியாவில் உற்பத்தி பாதிப்பால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் டாலருக்கு நிகரான அந்நிய நாட்டு நாணயங்களின் மதிப்பு அதிகரித்து வருகிறது. டாலரின் மதிப்பு குறைவதால், கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடைபெறுகிறது. இதன் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.
பெட்ரோலிய நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் தொடர்ந்து டாலரை வாங்குவதே, டாலரின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.