டாலர் மதிப்பு 4 பைசா குறைந்தது!

வெள்ளி, 9 மே 2008 (12:55 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு நேற்று குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, நிலைமை சிறிது சீரடைந்தது.

இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.

கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று சிறிது அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.72/ 41.74 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.41.76.

கடந்த நான்கு நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 80 பைசா வரை குறைந்தது.

அயல் நாட்டு சந்தைகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 124 டாலராக அதிகரித்தது.

அத்துடன் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்றது. இது போன்ற காரணங்களினால் பெட்ரோலிய நிறுவனங்களும், அந்நிய நாட்டு வங்கிகளும் தொடர்ந்து டாலரை வாங்குகின்றன. அத்துடன் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் டாலரை வாங்குகின்றன.

பிறகு வர்த்தகம் ஆரம்பித்தபோது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 1 டாலர் ரூ.41.50 முதல் ரூ. 41.71 என்ற அளவில் விற்பனையானது.

அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.41.55 முதல் ரூ.41.75 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்