டாலர் மதிப்பு 11 பைசா சரிவு!

திங்கள், 5 மே 2008 (13:01 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 பைசா அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.65/ 40.66 என்ற அளவில் இருந்தது. ஆனால் வர்த்தகம் தொடங்கிய அரை மணிநேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது.

1 டாலர் ரூ.40.53 முதல் ரூ.40.54 என்ற அளவில் விற்பனையானது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் ரூ.40.64/40.65.

அந்நிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் அதிகரிப்பதாலும், அடுத்த மூன்று வாரங்களில் பணவீக்க விகிதம் 6 விழுக்காடாக குறையும என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜிரியாவில் பெட்ரோலிய நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் எண்ணெய் துரப்பண கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இன்று 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 116 டாலராக அதிகரித்து விட்டது.

மதியத்திற்கு மேல் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்வார்கள். அப்போது டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்