வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.52/ 40.53 என்ற அளவில் இருந்தது. ஆனால் வர்த்தகம் தொடங்கிய அரை மணிநேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்தது.
1 டாலர் ரூ.40.70 என்ற அளவில் விற்பனையானது. புதன்கிழமை இறுதி நிலவரம் ரூ.40.51/40.52.
கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை கால் விழுக்காடு குறைத்தது. இதனால் மற்ற நாட்டு அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலரின் மதிப்பு அதிகரித்தது.
அத்துடன் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்தது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாத வர்த்தகர்கள் தெரிவித்தனர்.