டாலர் மதிப்பு 3 பைசா குறைவு!

வியாழன், 31 ஜனவரி 2008 (14:21 IST)
வங்கிகளிக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிதரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 3 பைசா குறைந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 39.39/40 ஆக நேற்று முடிவடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியோ போது 1 டாலர் ரூ. 39.42/39.44 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு 1 டாலர் ரூ.39.38 முதல் ரூ.39.44 பைசா வரை விற்பனையானது.

அயல்நாட்டு வங்கிகள், இந்தியாவில் உள்ள அவற்றின் பங்கு முதலீடு, கடன் பத்திரங்கள் முதலீட்டை, மற்ற் நாடுகளுக்கு மாற்றாமல் இருந்ததால், இன்று அந்நிய நாட்டு வங்கிகள் டாலரை வாங்கவில்லை. இதுவே டாலர் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்