மத்திய அரசின் சார்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் கோதுமை இறக்குமதி செய்வதை ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி) அந்நிய நாடுகளில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்வதற்காக கடந்த 10 ஆம் தேதி விலைப்புள்ளியை கோரியது. இதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், விலைகளை கூறியிருந்தன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு சென்ற சனிக்கிழமையே கடைசி நாள்.
அந்நிய நாட்டு நிறுவனங்கள் அதிகமான விலை கூறியுள்ளதால், இறக்குமதி செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசின் உ.யர் அதிகாரி தெரிவித்தார்.
அந்நிய நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ள விலைக்கு சம்மதம் தெரிவித்து மத்திய உணவு அமைச்சகத்திடம் இருந்தோ அல்லது வர்த்தக அமைச்சகத்திடம் இருந்தோ ஒப்புதல் தெரிவித்து எவ்வித தகவலும் வரவில்லை என்று அவர் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில் நாங்கள் இறக்குமதி செய்வதை ரத்து செய்து விட்டோம் என்று தெரிவித்தார்.