டாலர் மதிப்பு 8 பைசா சரிவு!

Webdunia

வியாழன், 20 டிசம்பர் 2007 (13:29 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 8 பைசா குறைந்தது. இன்று காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.51/39.52 ஆக இருந்தது (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.59/39.60).

அந்நியச் செலாவணி சந்தையில் 1 டாலர் ரூ.39.51 முதல் ரூ.39.57 வரை விற்பனையானது. பங்குச் சந்தையில் அதிக அளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ததால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் அதிக அளவு இருந்தது. இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நாளை அந்நியச் செலாவணி சந்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகளவு டாலரை வாங்கின. இவை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்கியதற்கான ‌விலையை தருவதற்காக டாலரை வாங்கினர்.

ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்த அந்நிய செலாவணி விலை விபரம்.

1 டாலர் ரூ.39.55
1 யூரோ ரூ.57.02
1 பவுன்ட் ரூ.79.62
100 யென் ரூ.34.92.

வெப்துனியாவைப் படிக்கவும்