முதல் தலைமுறை தொழில் முனைவோர் புத்தகம்!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (18:39 IST)
தமிழகத்தைச் சேர்ந்த வெற்றிகரமான 108 முதல் தலைமுறை தொழில் முனைவோர் பற்றிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

இந்த புத்தகத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிடுகிறது.

இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் நுட்பம், புதிய கண்டு பிடிப்பு மற்றும் தொழில் முனைப்பு பிரிவின் தலைவர் ஆர். ராமராஜ் கூறும் போது, இந்த புத்தகத்தை மார்ச் மாதம் தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிடுவார் என்று
மதுரையில் நடந்த கருத்தரக்கில் பேசும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது.

புதிய முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு நிதி முதலீடு செய்யும் பெங்களூரு தவிர மற்ற நகரங்களில் உள்ள தொழில் முனைவோரை பற்றி எண்ணி பார்ப்பதில்லை. தமிழகத்தில் புதிய முயற்சிகள் செய்யபடுகின்றன என்பதையும், அவர்கள் மாநிலத்தின் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.

இந்த புத்தகம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்ல, மற்ற தொழில் முனைவோருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் இடம் பெறவுள்ள 460 தொழில் முனைவோர் விண்ணப்பித்தனர். அதில் இருந்து 108 பேர் தேர்ந்தெடுக்ப்பட்டனர்.

இத்துடன் வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள், அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பகுதியும் இடம் பெறுகின்றது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்