வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.43/ 39.45 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.48/39.49).
பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்தது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர் விற்பனைக்கு வருவதால், ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் டாலரின் மதிப்பு அதிகளவு சரியாமல் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
கடந்த பல நாட்களாக டாலரின் மதிப்பு ரூ.39.40 க்கும் குறையாமல் தடுக்க ரிசரிவ் வங்கி அதிகப்படியாக விற்பனைக்கு வரும் டாலரை அந்நியச் செலவாணி சந்தையில் இருந்து வாங்குகின்றது.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலவாணி மதிப்பு :