பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி, நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வாயிலாக பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலம முதலீடு செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
கடந்த வாரத்தில் செவ்வாய் கிழமை செபி கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக அறிவித்த அடுத்த நாள் பங்குச் சந்தையில் அதிகளவு சரிவு ஏற்பட்டது.. இதனால் மும்பை, தேசிய பங்குச் சந்தையின் வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
செபி விதித்த கட்டுப்பாடுகள் நேற்றில் இருந்தே அமலுக்கு வந்து விட்டது. இதனால் இன்று காலையிலில் இருந்தே பங்குச் சந்தை வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது..
இந்நிலையில் இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் சில நிமிடங்கள் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு பிறகு பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேற்றம் கண்டது.
இன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 472 புள்ளிகள் அதிகரித்து, 19 ஆயிரத்தை தாண்டி 19,243.17 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்று பங்குகளை அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கின.
காலையில் மும்பை பங்குச் சந்தை, நேற்றைய இறுதி நிலவரமான சென்செக்ஸ் 18,770.89 புள்ளிகளை விட சிறிது உயர்வாக தொடங்கியது. ஒரு நிலையில் 650 புள்ளிகள் உயர்ந்து.
இறுதியில் 472 .28 புள்ளிகள் அதிகரித்து 19,276.45 புள்ளிகளில் முடிந்தது.
இது வரை இல்லாத அளவு அக்டோபர் 18 ந் தேதி சென்செக்ஸ் 19,198.66 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் 133.35 புள்ளிகள் அதிகரித்து, 5702.30 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 5568.95 புள்ளிகள்.
இன்று மும்பை பங்குச் சந்தையின் ரொக்க பரிமாற்றத்தில் ரூ. 9,000 கோடி மதிப்பிற்கு பங்கு வர்த்தகம் நடைபெற்றது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீட்டு எண் 169. 73 புள்ளிகள் அதிகரித்து 7,920.66 புள்ளிகளை தொட்டது. அதே போல் சுமால் கேப் 183.87 புள்ளிகள் அதிகரித்து 9550. 95 புள்ளிகளை தொட்டது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.