யூ.டி.ஐ பெட்ரோ 80 விழுக்காடு டிவிடென்ட் அறிவிப்பு!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:06 IST)
தனது யூனிட்தாரர்களுக்கு 80 விழுக்காடு ஈவுத் தொகை அறிவித்துள்ளது. இந்த வருவாய் வருமான வரி விலக்கு பெற்றது. ஈவுத் தொகை வழங்குவதற்கான பதிவுத் தேதி அக்டோபர் 3 எனவும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ரூ.10 முகமதிப்புள்ள யூனிட்டுகளுக்கு ஈவுத் தொகையாக ரூ 8 கிடைக்கும். இத்துடன் வளர்ச்சி பிரிவில் உள்ளவர்களுக்கு போனஸாக 2 யூனிடுகளுக்கு மூன்று யூனிட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

1999 ஆம் ஆண்டு மே மாதத்தில் யூ.ி.ஐ பரஸ்பர நிதி நிறுவனம், ூ.ி.ஐ பெட்ரோ திட்டத்தின் கீழ் யூனிட்டுகளை வெளியிட்டது. இதில் திரட்டப்படும் நிதி பெட்ரோலிய கச்சா எண்ணை, இயற்கை எரிவாயு கண்டு பிடிப்பு, ஆழ் துழை கிணறுகள் அமைத்தல், பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் குழாய் பாதையை அமைத்து நிர்வகித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக திரட்டப்பட்டது.

2007 ஆகஸ்ட் 31 ந் தேதி நிலவரப்படி, ூ.ி.ஐ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வகிப்பின் கீழ் ரூ.41,698.57 கோடி உள்ளது. இதில் 72 திட்டங்களின் கீழ் 80 இலட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்