ஜூலையில் தொழிலக உற்பத்தி 7.1 விழுக்காடு சரிவு!

Webdunia

புதன், 12 செப்டம்பர் 2007 (14:21 IST)
இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 9.6 விழுக்காடு உயர்ந்த தொழிலக உற்பத்தி ஜூலை மாதத்தில் மட்டும் 7.1 விழுக்காடு சரிந்துள்ளது!

ஜூலையில் மின் உற்பத்தி 7.5 விழுக்காடும், சுரங்க உற்பத்தி 4.9 விழுக்காடும் அதிகரித்துள்ள நிலையில், தொழிலக உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதென அரசு வெளியிட்டுள்ள பொருளதார மதிப்பீடு கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு ஜூலையில் தொழிலக உற்பத்தி 14.3 விழுக்காடாக இருந்தது. அது இந்த ஆண்டு 7.2 விழுக்காடாக மட்டுமே அதிகரித்துள்ளதென அந்த அறிக்கை கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்