வங்கிகள், வாகன நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் பெருமளவிற்கு விற்கப்பட்டதன் காரணமாக மும்பை, தேச பங்குச் சந்தைகளின் குறியீடு இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது!
இன்று காலை வணிகத்தில் 55 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்றதன் காரணமாக சரியத் துவங்கியது.
இன்றைய வணிகத்தின் இறுதியில் 279.08 புள்ளிகள் சரிந்து 14,255.93 புள்ளிகளாக முடிந்தது. தேச பங்குச் சந்தை குறியீடு 86.40 புள்ளிகள் சரிந்து 4,198.25 புள்ளிகளாகக் குறைந்தது.
கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து உயர்ந்து வந்ததால் இந்தச் சரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று தேச பங்குச் சந்தை தரகர் ஒருவர் கூறியுள்ளார்.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை கணிசமாகக் குறைக்கப் போவதாக வெளியிட்ட அறிவிப்பும், வாகன பங்குகளில் ஏற்பட்ட சரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. (பி.டி.ஐ.)