கார், லாரி, டிரக், பஸ் போன்ற வாகனங்களை கண்காணிக்கும் மென்பொருளை எம்ஃப்ரஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற நிறுனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்கு வாகனத்தில் ஒரு கருவியை இணைக்க வேண்டும். உங்கள் கனிணியில் " பைன் செக்யூர்" என்ற மென் பொருள் உதவியுடன், வாகனம் எங்கு செல்கிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கலாம்.
இந்த மென் பொருளை அறிமுகப்படுத்தி உள்ள எம்ஃப்ரஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜியின் மேலான்மை இயக்குநர் சைலேந்திரா பன்சால் கூறுகையில், இந்த மென் பொருள் கூகுள் வரைபடத்தின் உதவியுடன், வாகனம் எந்த இடத்தில் இருக்கின்றது. எந்த சாலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கனிணி திரையில் துல்லியமாக காண்பிக்கும். இந்த மென் பொருளின் விலை ரூ. 19,995. இந்த கருவியின் மாத வாடகை ரூ.495. வாகன உரிமையாளர் தேவை ஏற்பட்டால், அவரின் செல் போன் அல்லது கனிணி உதவியுடன் எந்த நிமிடமும் வாகனத்தை நிறுத்தலாம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
அதே போல் வாகனம் விபத்து அல்லது நெருக்கடியில் சிக்கினால், அதில் பொருத்தப் பட்டுள்ள கருவியின் பொத்தானை ஒட்டுநர் அழுத்தினால் போதும், வாகன உரிமையாளரை இ மெயில் அல்லது செல் போன் குறுந் செய்தி மூலம் எச்சரிக்கும்.
இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை திருடினால், உடனடியாக திருடப்பட்ட வாகனம் எங்கு இருக்கின்றது என்பதை அறியலாம்.
அத்துடன் வாகனம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று உரிமையாளர் முன்னதாகவே தீர்மானிக்கலாம். வாகனத்தின் ஒட்டுநர் வேறு பாதையில் சென்றால், உடனடியாக உரிமையாளருக்கு தெரிவித்துவிடும்.
இந்த மென் பொருள் வாகனம் எத்தனை கிலோ மீட்டர் ஒடியுள்ளது. எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு சென்றுள்ளது, எத்தனை தடவை அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது, எத்தனை தடவை ஒட்டுநர் தேநீர் அருந்த நிறுத்தியுள்ளார், தேநீர் கடை உள்ள இடத்தில் நிறுத்தினாரா அல்லது நடுக் காட்டில் நிறுத்தினாரா போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மென் பொருள் நீண்ட தூரம் சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள், பயணிகள் பேருந்துகள், டாக்ஸி, அவசர தேவையான காவல் துறை வாகனங்கள், தீயணைப்புத்துறை, மருத்துவ ஊர்திகள், ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு உபயோகமானதாக இருக்கும்.
இந்த மென்பொருளை நவ்யாக் கன்ஸ்ட்ரகசன் நிறுவனம் 50 லாரிகளில் பரிசோதனை முயற்சியாக பொருத்தி உள்ளது. இது மேலும் அதிக மென்பொருளை வாங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த மென்பொருளை ஏமன், நைஜிரியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களும் பயன்படுத்துகின்றனர் என்று பன்சால் தெரிவித்தார்.