இ-பே ஸ்னாப்டீலில் 133 மில்லியன் டாலர் முதலீடு

வியாழன், 27 பிப்ரவரி 2014 (15:31 IST)
இந்திய இணைய வழி வர்த்தகத் துறையில் பெருகி வரும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க இணைய வணிக நிறுவனமான இ-பே, இணைய வழி சந்தையான ஸ்னாப்டீலில் 133 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.
FILE

கலாரி கேப்பிடல், நெக்ஸஸ் வென்சர் பார்ட்னர்ஸ், பெஸ்ஸேமர் வென்சர் பார்ட்னர்ஸ், இண்டெல் காப்பிடல், சாமா காப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் குழுவினர் இ-பே தலைமையில் முதலீடு செய்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இ-பே தலைமையிலான நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையை, 50 மில்லியன் டாலர்கள் அதிகரிக்க ஸ்னாப்டீல் அனுமதி அளித்தது. தற்போது, மொத்தன் 235 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது 2,457 கோடி ரூபாய்) இணைய வழி சந்தையான ஸ்னாப்டீல் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆர்வங்களால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்த மகிழ்ச்சிகளை இ-பே மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனி அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தின.

வெப்துனியாவைப் படிக்கவும்