இந்தியாவின் கச்சா, எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு: ஓஎன்ஜிசி

வியாழன், 18 நவம்பர் 2010 (15:54 IST)
இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு முதல் பெருமளவிற்கு அதிகரிக்கவுள்ளதென எண்ணெய் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) கூறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 25 மில்லியன் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி 62 மில்லியன் கன மீட்டராகவும் இருந்துவந்துள்ளது என்று கூறிய ஓஎன்ஜிசி தலைவர் ஆர்.எஸ்.சர்மா, இந்த ஆண்டில் கச்சா உற்பத்தி 3 மில்லியன் டன் அதிகரிக்கும் என்றும், இயற்கை எரிவாயு உற்பத்தி 100 மில்லியன் கன மீட்டராகவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

ஓஎன்ஜிசி மேற்கொண்ட எண்ணெய், எரிவாயு கண்டுபிடிப்புகளில் இருந்து இந்த உற்பத்தி அதிகரிப்பு கிடைக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்