ஐ.டி.பி.ஐ வங்கி வட்டி குறைப்பு

செவ்வாய், 23 ஜூன் 2009 (11:36 IST)
ஐ.டி.பி.ஐ வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை கால் முதல் அரை விழுக்காடு வரை குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜுன் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

வைப்பு நிதியில் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ரூ.15 லட்சத்திற்கான வட்டி 6.75% இல் இருந்து 6.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான வைப்பு நிதிக்கு வட்டி 7% இல் இருந்து 6.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள்ளான வைப்பு நிதிக்கு ரூ.15 லட்சம் வரை வட்டி 7.5% இல் இருந்து 7.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி வரையிலான வைப்பு நிதிக்கு வட்டி 7.75% இல் இருந்து 7.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள, ஐந்து வருட சுவிதா வைப்பு நிதிக்கு வட்டி 8.5% இல் இருந்து 8 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்