கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளிச் செடி

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:18 IST)
தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளிச் செடிகளை மாடுகளுக்கு தீவனக்கும் பரிதாபனமான ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வெள்ளப்பாறைபட்டி, வடபழஞ்சி ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் தக்காளிச் செடிகளை பயிரிடப்பட்டுள்ளனர்.

தக்காளி சாகுபடி அதிகரித்துத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 15 கிலோ தக்காளி ரூ. 25 க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தக்காளி செடிகளில் இருந்து பறிக்கப்படும் தக்காளி, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்க ஆகும் செலவு அதிகமாகவும், இதனை விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாய் குறைவாகவும் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் பல விவசாயிகள் தக்காளியை செடியிலிருந்து பறிக்காமலேயே விட்டுவிட்டனர். இதனால், தோட்டத்தில் தக்காளிகள் பழுத்து செடியிலிருந்து அழுகி கீழே விழுந்து கிடக்கின்றன.

இவற்றை மாடுகளுக்குத் தீனியாக்கிட முடிவு செய்த விவசாயிகள், வயல் வெளிகளில் மாடுகளை மேயவிட்டுள்ளனர்.

இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டி கூறுகையில், "தக்காளிப் பழங்களைப் பதப்படுத்தும் குடோன்கள் இருந்தால், இப்படி விலை குறைந்த நேரத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். அரசுதான் மனது வைக்கவேண்டும்' என்று கூறினார்.

உழுதவன் கணக்கு பார்த்தா ஆழாக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி மட்டுமல்ல. முன்னோர்கள் அனுபவபூர்வமாக கூறிய கருத்துதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்