இந்தியாவில் உள்ள நீர் நிலைகளில் (அணை, பெரிய ஏரி-குளம் முதலியன) 36 அணைகளில் போதிய அளவு நீர் இருப்பதாக மத்திய நீர் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு, மழை பெய்வதால் அதிகரிக்கும் நீர் மட்டம், பாசனத்திற்கு திறப்பு போன்ற விபரங்களை மத்திய நீர் வாரியம் கண்காணிக்கிறது.
இந்த நீர் நிலைகளின் தண்ணீர் இருப்பு பற்றி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் உள்ள 81 நீர் நிலைகளில், 36 இல் மின் உற்பத்தி செய்யக்கூடிய அளவு தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. இவை ஒவ்வொன்றும் 60 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த நீர் நிலைகளில் 60 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பில் உள்ளது.
இந்த வருடம் பருவ மழை தொடஙக்குவதற்கு முன் (2008-ஜுன்) 81 நீர் நிலைகளிலும், அவற்றின் கொள் அளவில் 19 விழுக்காடு தண்ணீர் மட்டுமே இருப்பில் இருந்தது. இந்த வருடம் பாசனம் முடிந்த பிறகு, (2009-ஜனவரி 29 ஆம் தேதி நிலவரப்படி) இவற்றில் 43 விழுக்காடு நீர் இருப்பில் உள்ளது.
தற்போதுள்ள நீரின் அளவு, சென்ற வருடத்தில் இருப்பில் இருந்த நீரின் அளவுடன் ஒப்பிடும் போது 87% உள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களுடன் ஒப்பிடும் போது 103% நீர் இருப்பில் உள்ளது.
இந்த 81 நீர் நிலைகளில் 28 இல் 80% நீர் இருப்பில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளின் சராசரியை விட குறைந்த அளவு இருப்பில் உள்ளது.
மீதம் உள்ள 53 இல் கடந்த பத்து ஆண்டுகளின் சராசரியைவிட 80% கூடுதலாக தண்ணீர் இருப்பில் உள்ளது.
மத்திய நீர் வாரியம் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை முறையாக பயன் படுத்தும் வகையில், விவசாய துறையுடன் இடைவிடாத தொடர்பு கொண்டுள்ளது. இவற்றில் நீர் இருப்பு குறித்த தகவலை ஒவ்வொரு வாரமும் பெறுகிறது. இதன் அடிப்படையில் எந்த வகையான பயிர் செய்யலாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
2009 ஜனவரி 29 ஆம் தேதி நிலவரப்படி நீர் இருப்பு விபரம்.
இந்தூஸ், நர்மதா நதி, கட்சி பகுதியில் பாயும் நதிகள், கிருஷ்ணா, காவிரி, கிழக்கு நோக்கி பாயும் நதிகளில் கடந்த பத்து வருடங்களின் சராசரி அளவை விட அதிக அளவு உள்ளது.
கங்கை நதி, தபி, கோதாவரி, மகா நதி, இவற்றின் அருமாகையில் கிழக்கு நோக்கி பாயும் நதிகள், தென் இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகள் ஆகியவற்றில் சராசரி அளவாக உள்ளது. மகி, சபர்மதி நதியில் பற்றாக்குறை உள்ளது.
மின் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு 36 நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் 20 நீர் நிலைகளில் கடந்த பத்து வருடங்களின் சராசரியை விட குறைந்த அளவு நீர் இருப்பில் உள்ளது.