வீடியோகான் இந்தியா லாபம் குறைந்தது

ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (12:40 IST)
நுகர்பொருள் தயாரிப்பு முன்னணி நிறுவனமான வீடியோகான் இந்தியா நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 76% குறைந்து ரூ.60.43 கோடியாக சரிந்துள்ளது. 2008ஆம் ஆண்டு டிசம்பரில் முடிந்த காலாண்டில் ரூ.249.49 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த வருவாய் இதே முதல் காலாண்டில் ரூ.2074.67 கோடியாக குறைந்துள்ளது. இதே காலாண்டில் வீடியோகான் இந்தியா நிறுவனம் அன்னியச் செலாவணி வகையில் ரூ.21.13 கோடி இழந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2.48 சதவீதம் அதிகரித்து பங்கு ஒன்றுக்கு ரூ.93.10 என்று உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்