திருப்பூரில் டெக்னோவியா-2009 கண்காட்சி

வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:24 IST)
திருப்பூரில் வருகின்ற 6 ஆம் தேதி முதல் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படும் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது.

திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், சைமா இன்ஸ்டிடியூட் இணைந்து டெக்னோவியா 2009 தொழில்நுட்பக் கண்காட்சியை மோகன் பி.கந்தசாமி அரங்கில் நடத்துக்கின்றன.

இந்த கண்காட்டி பிப். 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

இந்த கண்காட்சி மாணவர்கள், பனியன் நிறுவனங்களில் பணி புரிபவர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்ளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இதில் தொழில்நுட்ப புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும். இதில் சைமா இன்ஸ்டிடியூட்டுக்கு 2009-10 ஆம் கல்வியாண்டுக்கான அட்மிஷனும் துவங்கப்படும்.

இந்த கண்காட்சி குறித்து சைமா தலைவர் கரோனா கே.சாமிநாதன், சைமா சங்கப் பொதுச்செயலர் எம்பரர் பொன்னுசாமி ஆகியோர், இதில் பல தொழில்நுட்பங்களை இலவசமாக ஒரே இடத்தில் அறிந்துகொள்ள முடியும். இந்த கண்காட்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்