பணவீக்கம் 5.24% ஆக குறைந்தது

வியாழன், 15 ஜனவரி 2009 (17:07 IST)
நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.24% ஆக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்க விகிதம் 5.91% ஆக இருந்தது.

எரிபொருட்கள் பட்டியலில் உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டதால், பணவீக்க விகிதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 4.26% ஆக இருந்ததாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்