விஜய் தொகுதியில் போட்டியிடும் மூன்று விஜய்!.. எப்படியெல்லாம் பண்றாங்க!...

BALA

செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (11:21 IST)
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம். முதல் முறையாக இந்த கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதுவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தவெக தனித்து போட்டியிடுகிறது. எனவே 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் விஜய். அதில் வேட்புமனுக்களில் சில குளறுபடிகள் நடந்தாலும் நேற்றோடு எல்லோரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்..

விஜயை பொருத்தவரை சென்னை பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதிகளும் போட்டியிடுகிறார். கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் வெற்றி பெறுவார் என தவெகவினர் நம்புகிறார்கள். ஒருபக்கம் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் போலீசார் பல கட்டுப்பாடுகளை விதிப்பதாலும், விஜயை பர்க்க பெருங்கூட்டம் கூடி விடுவதாலும் விஜயால் திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்ய முடியவில்லை. எனவே தொடர்ந்து தனது பிரச்சாரங்களை அவர் ரத்து செய்து வருகிறார்..

ஒருபக்கம் பொதுவாகவே ஒரு நட்சத்திர வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவர் போட்டியிடும் தொகுதியில் அவரின் பெயரிலேயே சில சுயேட்சை வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்துவார்கள்.. இது காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி செய்தால் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் பாமர மக்கள் குழம்பி மாற்றி வாக்களித்து விடுவார்கள்.. இதனால் வாக்குகள் சிதறும் என்பதுதான் இதன் அடிப்படை.. அந்த பழக்கம் இன்னமும் அரசியல் கட்சிகளுக்கு போகவில்லை..

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் அவரின் பெயர் C. ஜோசப் விஜய் என இருக்கிறது. அதேநேரம், அதே தொகுதியில் G.விஜய், K.விஜய், M.ஜோசப் என மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்