2026ஆம் ஆண்டில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கப்போவது அரசியல் கூட்டங்களோ அல்லது வாக்குறுதிகளோ அல்ல; மாறாக மூன்று மாநிலங்களை சேர்ந்த மூன்றுவகை சாமானிய பெண்களே. தமிழகத்தின் இல்லத்தரசி, வங்காளத்து பெண் வாக்காளர் மற்றும் கேரளத்து 'கல்பைஃப்' ஆகிய மூவருமே இந்த தேர்தலின் நிஜமான சக்திகள்.
தமிழகத்தில் திமுக வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன்களுக்கும், அதிமுகவின் இரட்டிப்பு பண உதவி மற்றும் இலவச பிரிட்ஜ் திட்டங்களுக்கும் இடையே இல்லத்தரசிகள் ஒரு 'ஜூரி' போல செயல்படுகின்றனர். இலவசங்கள் மகிழ்ச்சிதான், ஆனால் எங்களுக்குத் தேவை நிரந்தர வேலைவாய்ப்பு" என்பதே அவர்களின் குரலாக உள்ளது.
கேரளாவிலோ, ஈரான் போரினால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்கள் பணம் அனுப்ப முடியாமல் தவிப்பது, அந்த மாநில பெண்களின் வாக்குரிமையை வாழ்வாதாரம் நோக்கி திருப்பியுள்ளது.