சிண்டிகேட் வங்கி வட்டி குறைப்பு

சனி, 20 டிசம்பர் 2008 (17:12 IST)
பெங்களூரு. பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கி வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.

வீடு கட்ட, அடுக்குமாடி வாங்க ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் கடனுக்கு 8.5 விழுக்காடு வசூலிக்கப்படும். அதே போல் ரூ.5 லட்சத்திற்கும் மேல் ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு 9.25 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.

இதே போல் கடன் வாங்க கட்டும் முன்பணம் ரூ.5 லட்சம் வரை 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு முன்பணம் 15 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடன் விண்ணப்ப பரிசீலணை கட்டணம், கடன் தவணை காலத்திற்கு முன்பே கட்டினால் பிடித்தம் செய்யப்படும் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்குவபருக்கு, அவர் வாங்கும் கடன் மதிப்பிற்கு இலவச ஆயுள் காப்பீடு செய்யப்படும்.

இதன் படி கடன் வாங்குபவர்கள் கட்டும் முதல் தவணையில் இருந்து ஐந்து வருடங்களுக்கு வட்டி மாற்றம் இருக்காது. அதற்கு பிறகு நிரந்தர வட்டி அல்லது மாறும் வட்டி விகிதத்திற்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் அடுத்த வருடம் ஜீன் 30 ஆம் தேதிவரை வழங்கப்படும் கடனுக்கு மட்டுமே பொருந்தும்.

இதே போல் குறுந்தொழில்களுக்கான வட்டி 1 விழுக்காடும், சிறு தொழில்களுக்கான வட்டி அரை விழுக்காடும் குறைக்கப்பட்டுள்ளதாக சிண்டிகேட் வங்கி அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்