மும்பை: இந்தியாவில் அதிக அளவு வீட்டு வசதி கடன் கொடுக்கும் நிறுவனமான ஹெச்.டி.எப்.சி (ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்) வீட்டு கடன் வட்டியை குறைத்துள்ளது.
ஹெச்.டி.எப்.சி வீட்டு கடன் வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இதன் படி ரூ.20 லட்சத்திற்க்குள் உள்ள கடனுக்கு 10.25 விழுக்காடாக (மாறும் வட்டி) குறைத்துள்ளது. ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கடனுக்கான வட்டியை 11.25 விழுக்காடாக குறைத்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
தற்போது ஹெச்.டி.எப்.சி வீட்டு கடனுக்கு 11.75 விழுக்காடு வட்டி வசூலிக்கிறது.
ஹெச்.டி.எப்.சி தற்போது மற்ற வகை சில்லரை கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்து, 14.5 விழுக்காடாக குறைத்துள்ளது.