பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையூட்டுவதாக இல்லை-ரிசர்வ் வங்கி

வியாழன், 18 டிசம்பர் 2008 (12:00 IST)
மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறுயிருப்பதுடன், விவசாயம், தொழில் துறை, சேவை துறை ஆகிய மூன்று முக்கியமான துறைகளின் வளர்ச்சியும் குறையும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்தியாவின் வங்கி போக்கு மற்றும் வளர்ச்சி 2007-2008 என்ற அறிக்கையில் ரிசர்வ் வங்கி இவ்வாறு கூறியுள்ளது.

மத்திய அரசின் புள்ளி விபர துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை ரிசரிவ் வங்கி மேற்கோளாக காட்டி, ஜீலை-ஆகஸ்ட் மாதங்களில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.6 விழுக்காடாக உள்ளது. இது சென்ற வருடம் இதே மூன்று மாதங்களில் 9.3 விழுக்காடாக இருந்தது.

அதே போல் இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி 4.9 விழுக்காடக உள்ளது. சென்ற வருடம் 9.5 விழுக்காடாக இருந்தது.

இதே போல் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை ஏற்றுமதி 35.3% ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் 10.4% ஆக குறைந்துள்ளது.

ஆனால் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி அதிக அளவு குறைந்தது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஏழு மாதங்களில் ஏற்றுமதி 23.3 விழுக்காடாகவும், இறக்குமதி 36% ஆக உள்ளது.
(சென்ற வருடம் ஏற்றுமதி 22.7%, இறக்குமதி 27.4%).

இந்த ஏழுமாதங்களில் இறக்குமதியை விட. ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் அந்நிய நாடுகளுடன் ஆன வர்த்தக பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு அதிகரித்தே.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் வரையிலான அந்நிய நாடுகளுடன் ஆன வர்த்தக பற்றாக்குறை 10.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அந்நிய மூதலீடு குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்