சிறு தொழில் பிரச்சனையில் வங்கிகள் கவனம்- ரிசர்வ் வங்கி

புதன், 17 டிசம்பர் 2008 (13:23 IST)
மும்பை: சிறு தொழில், குறுந்தொழில் பிரிவுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியில் கவனம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கூறியுள்ளது.

மாநில அளவில் உள்ள வங்கி கமிட்டிகள், உடனடியாத சிறு, குறுந்தொழில்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் இந்த தொழில் பிரிவுகளில் உள்ள நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

அத்துடன் பெரிய தொழில் நிறுவனங்கள். சிறு தொழில்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிக்காக வங்கிகளில் கடன் வாங்குகின்றன. இவ்வாறு வாங்கும் கடனை கண்காணிக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் வாங்கும் இத்தகைய கடனில் இருந்து, அவை சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியை கொடுக்கின்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இதற்கென பெரிய நிறுவனங்களுக்கு உள்ள கடன் கடைசி தேதிக்குள், அவை பாக்கி பணம் வழங்குகின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதே போல் பெரிய நிறுவங்களுக்கு கடனை அனுமதிக்கும் போது, இந்த கடனுக்கான உச்சவரம்பிலேயே, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கான துணை கணக்கையும் நிச்சயிக்க வேண்டும்.

அதே போல் இந்த துணை கணக்கிற்கு அனுமதிக்கப்பட்டு உள்ள அதிக பட்ச கடன் தொகைக்கு மேல், சிறு தொழில் நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டியதிருந்தால், பெரிய நிறுவனங்களுக்கு மற்ற பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கடன் தொகையில் இருந்து செலுத்தலாம்.

அதே போல் சிறு தொழில் நிறுவனங்களுக்கான துணை கணக்கில் (கடன்) பணம் வழஙகியது போக, மீதம் இருந்தால் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்