புது தில்லி: மருந்துகள் மீதான கலால் தீர்வை 8 முதல் 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலன் பொது மக்களைச் சென்றடையும் வகையில், மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) குறைக்குமாறு அனைத்து மருந்து உற்பத்தியாளர்களையும், நிறுவனங்களையும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
கலால் தீர்வை விதிக்கப்படாத மருந்துகளை தவிர அனைத்து மருந்துகளுக்கும் (நான்-ஷெட்யூல்டு பேக்ஸ்) 2,84 விழுக்காடு வரை விலையை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மருந்து விலை ஆணையம் அதிகபட்ச சில்லறை விலை குறைப்பு மற்றும் அதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட விலைப் பட்டியலை மருந்து உற்பத்தியாளர்களும், நிறுவனங்களும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.