கனரக வாகனம் விலை குறைப்பு

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:39 IST)
புது டெல்லி: வால்வோ எய்சர் வாகன உற்பத்தி நிறுவனம், வால்வோ கனரக வாகனங்களின் விலையை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இல் இருந்து, ரூ.2 லட்சம் வரை குறைத்துள்ளது.

இதே போல் எய்ஷர் டிரக், மற்றும் பஸ்களின் விலையை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு வாகனத்துறைக்கு மதிப்பு கூட்டு வரியை 4 விழுக்காடாக குறைத்துள்ளது.

இதை தொடர்ந்து வாகனங்களின் விலையும் குறைய துவங்கியுள்ளது.

ஏற்கனவே டாடா மோட்டார், மாருதி சுஜிகி, ஹூன்டாய் ஆகியவை வாகனங்களின் விலையை குறைத்துள்ளன.

தற்போது வால்வோ எய்ஷர் கமர்ஷியல் வேகிள்ஸ் லிமிடெட்டும், வாகன விலையை குறைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் சுவிடனைச் சேர்ந்த வோல்வோ, இந்தியாவைச் சேர்ந்த எய்ஷர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்