புது டெல்லி:உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு, உணவு பதப்படுத்தும் துறைக்கான அமைச்சகம் பல்வேறு வசதிகளையும், ஊக்கத் தொகைகளையும் அளித்து வருகிறது.
இவை திட்டம் சார்ந்ததாக உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையோ பகுதியையோ சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆயினும் ஒருங்கிணைந்த மலைவாழ் மேம்பாட்டு திட்டம் செயல்படும் இடங்கள் மற்றும் கடினமான பகுதிகளில் அதிக அளவு உதவிகள் அளிக்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோர் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காக இப்பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் கருத்தரங்குகள் நடத்த உதவி செய்யப்படுகிறது.
இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டுமெனில் குறைந்தது 25 விழுக்காடு அளவிற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பங்கு பெற வேண்டும். தொழில் முனைவோருக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற அளிக்க தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.