கோவை: தண்ணீரை சுத்தப்படுத்தாமல் ராஜ வாய்க்காலில் விட்டதால் நாற்பது சாய பட்டரைகள் மூடல்.
கோவை மாவட்டத்தில் சாயபட்டரைகள் வெளியேற்றும் தண்ணீரை, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், முறையாக சுத்திகரிக்காமல் தெலுங்குபாளையம் அருகே ராஜ வாய்க்காலில் விட்டதால் 40 சாயபட்டரைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூடியுள்ளது.
இந்த வாய்க்காலின் தண்ணீர் மாசுபடுவதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வி,பழனிகுமார் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். மாசு கட்டுப்பாடு வாரிய சோதனையில், சாய பட்டரைகள் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்படுத்தாதது தெரிய வந்தது.
இதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த சாயபட்டரைகளின் மின் இணைப்பை, மின்வாரியம் மூலம் துண்டிக்குமாறு கூறியது.
இதனால் இந்த 40 சாய பட்டரைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இயங்காமல் மூடப்பட்டது.