ரூபாய் மதிப்பு 28 பைசா உயர்வு

புதன், 3 டிசம்பர் 2008 (14:10 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா அதிகரித்து.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.87/49.88 என்ற அளவில் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 28 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 50.15 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 49.78 முதல் ரூ.50.23 என்ற அளவில் விற்பனையானது.

வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு உயர்நததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில் யூரோ, ஆசிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது.

நேற்று 1 டாலரின் மதிப்பு ரூ.50.65 என்ற அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.90 பைச
1 யூரோ மதிப்பு ரூ.63.42
100 யென் மதிப்பு ரூ.53.49
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.74.30.

வெப்துனியாவைப் படிக்கவும்