ரியல் எஸ்டேட் துறைக்கு உதவி

புதன், 3 டிசம்பர் 2008 (13:33 IST)
புது டெல்லி: தற்போதைய பொருளாதார, நிதி நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு புத்துயிர் ஊட்ட வீட்டு கடன் வட்டியை குறைப்பது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அயல் நாடுகளில் கடன் வாங்கும் நிபந்தனைகளை தளர்த்துவது, தற்போது வங்கிகளில் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைப்பது உட்பட பல ஆலோசனைகள் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று ஊரக மேம்பாட்டு துறை செயலாளர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அயல்நாடுகளில் கடன் வாங்குவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவதால், அவை அதிக அளவு கடன் வாங்க முடியும். இதன் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உள்ள பணச் சிக்கல் குறையும்.

தற்போது நாட்டின் தேவையை விட வீட்டு வசதி குறைவாக உள்ளது. இது தேவைக்கு தகுந்தாற்போல் அதிகரிக்க வேண்டும்.

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு குழு [National Real Estate Development Council (Nardeco)] ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சில சலுகைகளை கோரியுள்ளது. இதில் சில கோரிக்கைகளையும் இணைத்துள்ளோம்.

இவைகளுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் கொடுத்த பிறகு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்